செவ்வாய்க்கு குரங்கை அனுப்பும் ரஸ்யா
செவ்வாய் கிரகத்திற்கு ஒரு குரங்கை அனுப்பி வைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அந்த குரங்குக்குத் துணையாக ஒரு ரோபோட்டும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த செவ்வாய் பயணத்தின் கால அளவு 520 நாட்களாகும். செவ்வாயில் மனிதன் வசிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யா, முதன் முறையாக செவ்வாய் கிரகத்திற்கு ஒரு உயிரினத்தை அனுப்பி வைத்து ஆராயவுள்ளது. அந்த உயிரினம் ஒரு குரங்கு. இதுகுறித்து ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி நிறுவனம் ஒன்று கூறுகையில், செவ்வாய் கிரகத்திற்கு குரங்கு ஒன்றை அனுப்பி வைக்க ரஷ்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக ரஷ்ய விண்வெளி ஆய்வு அகாடமியுடன் தொடர்பு கொண்டுள்ளோம். முன்பு நாங்கள்தான் ரஷ்ய விண்வெளி ஆய்வுக்குத் தேவையான குரங்குகளை சப்ளை செய்துள்ளோம். தற்போதும் நாங்களே செவ்வாய் செல்லவுள்ள குரங்கையும் சப்ளை செய்யவுள்ளோம் என்றனர். முதலில் ஒரு குரங்கு மட்டும் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதைத் தொடர்ந்து ஒரு ரோபோட் அனுப்பி வைக்கப்படும். இந்த ரோபோட்தான், குரங்குக்குத் துணையாக செவ்வாய் கிரகத்தில் இருக்கும். குரங்கைக் குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டுவது வரை அனைத்தையும் இந்த ரோபோட்டே பார்த்துக் கொள்ளுமாம். குரங்கும், ரோபோட்டும் 520 நாட்கள் செவ்வாயில் இருப்பார்கள். குரங்கைக் கவனித்துக் கொள்ளும் வகையிலான ரோபோட்டை உருவாக்குவது கடினமான காரியமே அல்ல. உண்மையில் கஷ்டமான சமாச்சாரம் என்னவென்றால், குரங்குக்கு, அந்த ரோபோட்டுடன் பழக கற்றுக் கொடுப்பதுதான். ரோபோட்டுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரைவில் குரங்குக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
More News
Top News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |
Article
Feed back
gopi
Qatar_Rajan
rita
sajeevan france
Hஆஈ GTBC.FM உங்கட நிகல்சிகல் அனைத்தும் பிரமாதம்.ஒரு மாதமாதான் கேட்டுகொன்டு வருகிரொம் நேரில் தொலைப
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss
நாங்கள் விரும்புவதை நீங்கள் நினறவேற்றூகின்றீர்கள்.அதற்காக GTBC.FM க்கு நன்றீ.எங்கள் குடும்பத்தில் ,Ī
sandiyai








