Home FeedBack About us Contact us
எய்ட்ஸ் நோய்க்கு எதிரான போரில் இந்தியாவும் அமெரிக்காவும்
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு என்பது இருதரப்பு நாட்டம் நிறைந்தது. அறிவியல், கல்வி, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட மனித குலம் சார்ந்த சகல முக்கியத் துறைகளிலும் இரு நாடுகளும் அரசு ரீதியாகவும் மக்களிடையேயும் வலுவான, நேர்மறை உறவைக் கொண்டுள்ளன. அதன் வாயிலாக, உலக மக்களின் இன்றைய சவால்களை மட்டுமின்றி, வருங்காலங்களில் எழக்கூடிய சவால்களையும் முறியடிக்கும் நோக்குடன், இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன.

பல வாரங்களுக்கு முன் நான் சென்னை வந்திருந்தபோது, தாம்பரத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டேன். அமெரிக்க அதிபர் ஒபாமாவின், எய்ட்ஸ் நோய் நிவாரணத்துக்கான அவசர காலத் திட்டம் அங்கு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதை அறிந்தேன். இத் திட்டத்தின் கீழ், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆண்டுதோறும் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 30,000 நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனை சிகிச்சை அளித்து வருகிறது. எய்ட்ஸ் நோயாளிகளைக் காணும்போது மனம் வேதனைப்பட்டாலும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அந்த மருத்துவமனையில் அளிக்கப்படுவது என்னை மிகவும் ஈர்த்தது.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் பல மருத்துவர்கள், செவிலியர்களை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பும் கிட்டியது. உற்சாகமும் சிரிப்பொலியும் கலந்த குழந்தைகளைக் கொண்டிருந்த மகப்பேறு பிரிவுக் காட்சி, என் நெஞ்சை நெகிழ வைத்தது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மகளிருக்கு, அமெரிக்க அரசின் நிதியாதரவுடன் இந்திய அரசு அளித்து வரும் சிகிச்சையே இதைச் சாத்தியமாக்கியிருக்கிறது. இல்லையேல் நெஞ்சைத் தொட்ட இக் காட்சியை நான் அங்கு கண்டிருக்க முடியாது. அக் குழந்தைகள் என்னிடம் பாடிக் காட்டினார்கள். அவர்கள் வரைந்த ஓவியங்களை ஆர்வத்துடன் என்னிடம் காட்டி மகிழந்தார்கள். அவர்கள் கண்களில் வருங்காலம் சார்ந்த நம்பிக்கை ஒளியைப் பார்த்தேன். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வை மேம்படுத்தும் பொருட்டு, இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டு வருவதன் பலனே, அந்த நம்பிக்கையின் ஆதாரம்.

டிசம்பர் 1, 2009. உலக  எய்ட்ஸ் தினம். இந்தத் தேதியில் ஒரு விஷயம் தெளிவாகியிருக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு எதிரான உலகளவிலான போரில், நாம் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறோம் என்பதுதான் அது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் நான் நேரில் கண்டறிந்த உண்மை நிலவரம் எனக்கு இதை உணர்த்துகிறது. உலக சமுதாயத்தின் ஓர் அங்கமாக இந்த வெற்றியை நாம் பார்க்கிறோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரைகூட, இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 40,000 பேர்களுக்கு மட்டுமே, எய்ட்ஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் அடிப்படை மருந்துகள் கிட்டின. இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் என்ற வகையில் உளத் திருப்தியுடன் ஒரு விஷயத்தை உங்களுக்குச் சொல்ல விழைகிறேன். அமெரிக்க அதிபரின், எய்ட்ஸ் நோய் நிவாரணத்துக்கான அவசரகாலத் திட்டத்தின் ஆதரவுடன், இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் பல்வேறு அரசு மருத்துவமனைகள் மற்றும் எய்ட்ஸ் நோய் நிவாரண அமைப்புகள் வாயிலாக, தற்போது 2.5 லட்சம் பேருக்கும் அதிகமான நோயாளிகளுக்கு எய்ட்ஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் அடிப்படை மருந்துகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

வரலாற்றுரீதியாகப் பார்த்தால், அமெரிக்க அரசின் இத் திட்டம், ஒரே ஒரு நோய்க்கு எதிராக உலகளவில் செயல்படும் மாபெரும் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், அமெரிக்க அரசும் அதன் கூட்டு நிறுவனங்களும் இந்திய அரசுடன் இணைந்து, 2006-2011 காலத்துக்கான இந்தியாவின் மூன்றாவது தேசிய எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. அமெரிக்க அதிபரின் இத்திட்டத்தின் கீழ் மட்டும், கடந்த ஐந்தாண்டுகளில், எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக இந்தியா 136 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிதியாதரவைப் பெற்றிருக்கிறது.

இந்தியாவில் எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்கும் முயற்சிகளுக்கு, அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருக்கிறது. இது உலகளவிலான போராகும். இரு நாடுகளும் கைகோர்த்தே அதை எதிர்கொள்ள வேண்டும். அடுத்து வரும் ஐந்தாண்டுகளில், எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்தியாவுடன் நெருக்கமாக ஒத்துழைப்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம், மேலும் பல எய்ட்ஸ் நோய் நிவாரண அமைப்புகளை இனங்கண்டு உரிய ஒத்துழைப்பு அளிப்பதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் மேலும் எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுத்து நிறுத்தும் வகையில், இந்திய அரசுடன் தொடர்ந்து நாங்கள் இணைந்து செயலாற்றுவோம். அமெரிக்க அதிபரின் எய்ட்ஸ் நோய் நிவாரணத்துக்கான அவசரகாலத் திட்டத்தின் கீழ், இந்த நோய்க்கு எதிரான இந்தியாவின் முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து எல்லா விதத்திலும் ஆதரவளிப்போம்.

எய்ட்ஸ் நோய் தடுப்பு சார்ந்து - வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மட்டுமே - இந்நோயை முற்றிலும் ஒழித்துவிட முடியாது என்பதை நாங்கள் நன்கறிவோம். அதன் பொருட்டே, அமெரிக்க அதிபர் ஒபாமாவும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் இணைந்து வகுத்துள்ள, உலகளாவிய சுகாதார முனைப்புத் திட்டம் வாயிலாக, எய்ட்ஸ் நோய் தடுப்பு முயற்சிகளை ஒருங்கிணைக்கும் முகமாக, காசநோய், மலேரியா நோய்களுக்கான சிகிச்சை மற்றும் மகப்பேறு நலம் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா ஆதரவளிக்கும். எய்ட்ஸ் நோய்க்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயல்படும் அதே வேளையில், இவ்விஷயம் சார்ந்த மனித உரிமைச் சிக்கல்களையும் நாம் களைய வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். இக்கூட்டுச் செயல்பாட்டின் மூலம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறுவது ஒருபுறம் இருந்தாலும், இந்தியாவின் வருங்காலச் சுகாதாரக் கட்டமைப்பை வலுவாக்குவதும் நமது பொறுப்பாகும். தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் நான் பார்த்த குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலம் அமைய வேண்டும். எல்லா வகையிலும் ஆரோக்கியமான எதிர்காலத்தை அவர்களுக்கு உருவாக்கித் தருவதில், இரு நாட்டு அரசுகளும் இணைந்து பாடுபடும்.

எய்ட்ஸ் நோய்க்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதில் அமெரிக்கா உறுதியுடன் இருக்கிறது. உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி, இந் நோய்க்கு எதிரான இந்தியாவின்  நடவடிக்கைகளுக்கு, தொடர்ந்து ஆதரவளிப்போம் என்று அமெரிக்கா மறுஉறுதி அளிக்கிறது. ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், நம் குடிமக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்தைக் காண்கிறோம்.

More News

இலங்கைத் தமிழர் தொடர்பான ராஜிவ் காந்தியின் செயல் கொள்கை குழப்பமானது, ராஜிவ் கொடூரமாக கொல்லப்பட இதுவே காரணம் - இந்திய அரசின் மூத்த உளவுத்துறை அதிகாரி பி.ராமன்
அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?
பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகளும் தீர்வுகளும்
தாய்மொழியை மறந்த தமிழ் மக்களை தாயே மன்னித்தாலும் தலைமுறை மன்னிக்காது.
எதிர்கால வேளாண்மை
ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் சித்த மருந்துக்கு உள்ளது
உழைப்புப் பாகுபாட்டினை மீள்பார்வை செய்வது சமுதாயத்தின் மீட்சிக்குப் பேருதவி!
"பவர் பிளே" அதிரடி!
டிவி பார்ப்பதால் குழந்தைகளின் பேச்சு திறன் குறைகிறது

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss
sandiyai