Home FeedBack About us Contact us
ரஞ்சிதா நடிகர் சங்க உறுப்பினரே இல்லையாம்!

நடிகை ரஞ்சிதா தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினரே இல்லை என்று நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார் கூறியிருக்கிறார். நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த சி.டி., வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் சாமியாருடன் ரொம்பவே நெருக்கமாக இருந்த ரஞ்சிதா இப்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், சர்ச்சையில் ஒரு நடிகை சிக்கியிருப்பதால், நடிகர் சங்கம் என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்து வருகிறது.

நடிகைகள் எல்லோரும் உத்தமிகள் என்பதுபோல பேசி வந்த நடிகர்கள் எல்லாம் இந்த விவகாரம் குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள். நடிகை புவனேஸ்வரி விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டபோது, செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களை அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்த நடிகர்கள் ரஞ்சிதா விவகாரம் பற்றி எங்கே நம்மிடம் நிருபர்கள்‌ கேட்டு விடுவார்களோ என அஞ்சி நிருபர்களை சந்திப்பதையே தவிர்த்து வருகிறார்கள்.

சத்யராஜ், சுந்தர் சி இணைந்து நடித்திருக்கும் குரு சிஷ்யன் படத்தின் பிரஸ் மீட்டிற்கு சத்யராஜ் வருவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நிருபர்களும், சத்யராஜிடம் ரஞ்சிதா விவகாரம் பற்றி கேட்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் சத்யராஜ் அந்த மீட்டிங்கிற்கு வரவே இல்லை. இதேபோல பத்திரிகையாளர்களை ஈனப்பிறவி என்றும், நடிகைகளை பாதுகாப்பதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசிய சூர்யாவும், ரஞ்சிதா விவகாரத்தில் இன்னமும் வாய் திறக்கவில்லை.

நடிகர் சங்கம், சாமியாருடன் உல்லாசமாக இருந்து மாட்டிக் கொண்ட நடிகை ரஞ்சிதாவை காக்க சட்ட நடவடிக்கை எடுக்குமா? அல்லது அவரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் ரஞ்சிதா விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. "அவர் நடிகர் சங்கத்தில் உறுப்பினரே இல்லை. அப்படியிருக்கும் போது அவரை எப்படி நாங்கள் நீக்க முடியும்?" என்று கூறியிருக்கிறார் சரத்குமார்.

நடிகை ரஞ்சிதா 1992ம் ஆண்டு வெளியான நாடோடி தென்றல் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். அதன் பிறகு கிழக்கு வீதி, பேண்டு மாஸ்டர், மதுரை மீனாட்சி, கேப்டன், அதர்மம், என் ஆசை மச்சான், ஜெய்ஹிந்த், வீட்டை பாரு நாட்டை பாரு, அமைதி படை, தோழர் பாண்டியன், பெரிய மருது, அத்தை மகள் ரத்தினமே, தொட்டில் குழந்தை, கருப்பு நிலா, தமிழச்சி, கர்ணா, சின்ன வாத்தியார், சீதனம், பாட்டு வாத்தியார், மக்கள் ஆட்சி, முஸ்தபா, புருஷன் பொண்டாட்டி, பகைவன், நிலவே உனக்காக, உரிம‌ை போர், நாக தேவி, தாஜ் மஹால், மையம், ஆஹா எத்தனை அழகு, சாசனம், அமிர்தம், மாய கண்ணாடி, ஓடும் மேகங்களே, பொம்மலாட்டம், அழகர் மலை உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள ரஞ்சிதா, கிருஷ்ணவம்சி, ரோஜா, தெக்கத்தி பொண்ணு ஆகிய டி.வி. தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

More News

படத்தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்த ஷங்கர்!
ஸ்ரீதேவி படத்தில் நடிக்க மறுத்த அசின்
ஸ்ரோயாவின் லிப் டு லிப் முத்தக் காட்சிகள் இணையதளங்களில்
நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு??
127 ஹவர்ஸ் படத்திற்கு இசை அமைத்து அசத்தியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான்.
நடிகர் பிரகாஷ்ராஜுக்கும், போனிவர்மாவுக்கும் இன்று (ஆகஸ்ட் 24) திருமணம்
பழம்பெரும் நடிகர் ஏ.கே.வீராசாமி காலமானார்.
வலராற்று புத்தகத்தை படித்த அனுபவத்தை கொடுத்திருக்கும் "வம்சம்"!
நான் மகான் அல்ல!
24-ந் திகதி மும்பையில் பிரகாஷ்ராஜ்-போனிவர்மா திருமணம்!
பெரும் எதிர்பார்ப்போடு இன்று வெளியாகிறது நான் மகான் அல்ல.
தமிழ் திரையுலகின் சாதனைகளை முறியடித்துக் கொண்டிருக்கிறது எந்திரன்.
கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா நடத்த கேரள திரையுலகம் எதிர்ப்பு
போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு , அசின் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு
ரபீந்திரநாத் தாகூர் வேடத்தில் அமிதாப் பச்சன்
கௌரவர்கள் பாடல் வெளியீட்டு விழா!!
செப்டம்பர் 3-ம் திகதி ரிலீஸாகிறது எந்திரன்!!!
கமல் - ஸ்ரீதேவி காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ள கமல்ஹாசன்.
எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா : பணம் வாங்க மறுத்த வடிவேலு
அஜித்துக்காகவெல்லாம் காத்திருக்க முடியாது - கௌதம் மேனன்
மீண்டும் மலையாளப் படத்தில் கமல்!
ரஞ்சிதா படத்தை வாங்க போட்டா போட்டி
எந்திரன் சரித்திரம் படைக்கும்-ரஜினி
ரஜினி உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் - இயக்குநர் ஷங்கர்.
ஹவுஸ்புல் படத்துக்கு கோர்ட் தடை
காது கேளாதோரின் சிகிச்சைக்கு உதவ கே.ஜே.ஜேசுதாஸ் முடிவு
நட்பையும், காதலையும் பிரதானமாகச் சொல்லும் படம் இனிது இனிது
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மேதை படத்தில் நடிக்கிறார் ராமராஜன்
மங்கத் தொடங்கியுள்ள த்ரிஷாவின் இந்திப்பட வாய்ப்புகள்
சிம்பு பரத் இணைந்து நடிக்கும் வானம்

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

mani
gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss