“பருத்தி வீரன்”, “ஆயிரத்தில் ஒருவன்” படங்களுக்கு பிறகு பரட்டை, அழுக்கு மேக்கப் இல்லாமல் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அதை நிறைவேற்றும் படமாக பையா அமைந்துள்ளது. அழகான “ஸ்டைல்” படமாக வந்துள்ளது.
கமர்சியலான காதல் கதை, இதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளனர். யுவன்சங்கர் ராஜா அருமையான பாடல்களை கொடுத்துள்ளார். சண்டை காட்சிகளும் பிரமிப்பாக இருக்கும். தமன்னாவுடன் டான்ஸ் ஆட கஷ்டப்பட்டேன். இது எனக்கு முக்கியமான படம் என்றார்.
டைரக்டர் லிங்குசாமி கூறியதாவது:-
பையா பட பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. என்னை சந்திக்கிறவர்கள் “பையா” எப்ப வரும் என்று எதிர்பார்ப்போடு கேட்கின்றனர். இதில் கார்த்தி ஸ்டைலாக இருப்பார். 80 சதவீத காட்சிகளை ரோட்டில் எடுத்துள்ளோம். ஒரு சேசிங் சண்டைக்காட்சியை பிரமாண்டமாக படமாக்கியுள்ளோம். பெண்கள், பசங்களுக்கு பிடிக்கும் படமாக வந்துள்ளது. தமிழ், தெலுங்கில் ஏப்ரல் முதல் வாரம் ரிலீசாகிறது. தயாநிதி அழகிரியின் கிளவ்ட் நைன் மூவிஸ் பட நிறுவனமும், திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனமும் இணைந்து இப்படத்தை வெளியிடுகின்றன என்றார்.
More News
Top News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








