இந்த ஆண்டு இன்டர்நெட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என இத்தாலிய இதழ் மற்றும் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இத்தாலியிலின் புகழ்பெற்ற இதழ் " "வயர்டு இத்தாலி" ". உலக நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்துவதில் இன்டர்நெட் முக்கிய பங்கு வகிப்பதாக அது தெரிவித்துள்ளது. மகத்தான சேவையைப் பாராட்டி, இன்டர்நெட்டுக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
இதற்காக, " "இன்டர்நெட் பார் பீஸ்" " (Internet for PEACE) என்ற தலைப்பில் ஒரு பிரசாரத்தைத் தொடங்கி உள்ளது. இதன்படி, உலகில் அமைதியை ஏற்படுத்துவதற்கு இன்டர்நெட் ஆற்றி வரும் பங்கு குறித்து பல்வேறு தகவல்கள் எடுத்துரைக்கப்படும். இந்த பிரசாரம் வரும் செப்டம்பர் வரை தொடரும். இதுகுறித்த தங்களது கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
" "இன்டர்நெட் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களை மத, இன வேறுபாடு இல்லாமல் ஒருங்கிணைக்கிறது" " என வயர்டு இத்தாலி பத்திரிகை ஆசிரியர் லுனா தெரிவித்துள்ளார்.
இதுதவிர, 2003ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபடி மற்றும் புற்றுநோய் சிகிச்சை நிபுணரான உம்பெர்டோ வெரோனெசி ஆகியோரும், இன்டர்நெட்டுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர்.
More News
Top News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








