ஜப்பானின் தெற்கு கடலோரப் பகுதியில் உள்ள பல தீவுகளில் இன்று (07/02/2010) கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் கடலோரப் பகுதிகளில் சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் இந்த சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.
தெற்கு ஜப்பானில், கடற்கரையில் இருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் உள்ள மியாகோஜிமா தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக பூகம்ப ஆய்வியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் தாக்கத்தை பக்கத்து தீவுகளில் கடுமையாகவும், தைப்பீ உள்ளிட்ட நகரங்களில் லேசாகவும் மக்கள் உணர்ந்துள்ளனர்.
பல இடங்களில் கட்டிடங்கள் ஆட்டம் கண்டதாக கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 3.10 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 என பதிவானதாக ஜப்பான் பூகம்ப ஆய்வியல் மையம் தெரித்தது.
அமெரிக்க புவியயல் ஆய்வு மையத் தகவலின் படி இந்த நிலநடுக்கம் 6.4 என பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதாரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.
More News
Top News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








