ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த மோதலில், 300 பேர் கொல்லப்பட்டனர்.
நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தெற்கு பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ளனர்.
தெற்கு பகுதி செழிப்பான விளைநிலங்களை கொண்ட பகுதி. எண்ணெய் வளம் கொண்ட இந்த நாட்டில், முஸ்லிம்கள் பலர் வளமான தெற்கு பகுதிக்கு இடம் பெயர்கின்றனர்.
இந்த விஷயத்தில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கடந்த 10 ஆண்டுகளாக பூசல் நிலவி வருகிறது.
கடந்த ஜனவரியில் இது தொடர்பாக வன்முறை மூண்டது. இந்த வன்முறை நேற்று வரை தொடர்கிறது.
கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் பிளேட்டியு மாநிலத்தின் சோட், டோகோ-நகாவா கிராமங்களில் நான்கு நாட்களாக தொடர்ந்து இரண்டு பிரிவினருக்கிடையே மோதல் முற்றியுள்ளது.
மலைவாழ் மக்கள் சிலர், கூரிய ஆயுதங்களை கொண்டு தாக்குவதும், எதிர் பிரிவினர் துப்பாக்கியை கொண்டு சுடுவதுமாக இதுவரை 300 பேர் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவின் அதிபர் உமரு யார் அடுவா, இதய அறுவை சிகிச்சை முடிந்து மூன்று மாதத்துக்கு பிறகு தற்போது தான் நாடு திரும்பியுள்ளார்.
தற்காலிக அதிபர் ஜொனாதன், மக்களை அமைதி காக்கும் படி கோரியுள்ளார். கலவரம் மூண்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
More News
Top News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








