"யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரக அலுவலகத்தை விரைவில் துவக்க இந்தியா ஆர்வமாக உள்ளது," "" " என வெளியுறவு செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார்.
இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில், அங்கு இந்திய தூதரக அலுவலகத்தை அமைக்க, இந்திய அரசு ஆர்வமாக உள்ளது.
இதுகுறித்து, அதிபர் ராஜபக்ஷேயுடன் பேசிய போது, அவர் சாதகமாக பதிலளித்தார். இதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, மேலும் பலப்படும்.
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட மக்களை, மறு குடியமர்த்தும் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு இந்தியா உதவும்.
இலங்கை வடக்கு பகுதி மக்கள், மீண்டும் அமைதியான சூழ்நிலையில் வசிக்க வேண்டும் என விரும்புகின்றனர். அவர்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவானவர்கள் அல்ல. இவ்வாறு நிருபமா ராவ் கூறினார்.
More News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








