வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரைன் லாரா வீட்டில் பணம் மற்றும் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
டிரினிடாட்டில் போர்ட்ஆப் ஸ்பெயின் நகரில் லாராவின் வீடு இருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை தனது வீட்டை பூட்டிவிட்டு சென்றிருக்கிறார். பின்னர் வீடு திரும்பிய அவர், படுக்கையில் படுத்து உறங்கியிருக்கிறார்.
மறுநாள் காலை கண்விழித்துப் பார்த்தபோது வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் காணாமல் போனது கண்டு திடுக்கிட்டுப்போய் இருக்கிறார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் லாரா புகார் அளித்துள்ளார்.பிரபல பாடகி பியான்சி நடத்தும் இசை நிகழ்ச்சி ஒன்றையும் லாரா ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான விஐபிக்கள் டிக்கெட்டுகளும் திருடபோய் உள்ளது.
லாராவுக்கு ஆஸ்திரேலிய பிரதமரால் அளிக்கப்பட்ட விருதுக்கான கேடயமும் திருடு போய்விட்டது. வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் நட்சத்திரம் லாரா வீட்டில் நடந்துள்ள இந்த திருட்டு ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இது ஒருதேசிய அவமானம் என்று அந்நாட்டு கிரிக்கெட் பிரமுகர்கள் தெரிவித்து உள்ளனர்.
More News
Top News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








