வங்கதேச அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இங்கிலாந்து அணி, 3-0 என ஒருநாள் தொடரை கைப்பற்றி, கோப்பை வென்றது. சொந்த மண்ணில் வங்கதேச அணி "ஹாட்ரிக்" " தோல்வியடைந்து ஏமாற்றியது.
வங்கதேசம் சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதலிரண்டு போட்டியில் வெற்றி கண்ட இங்கிலாந்து, ஏற்கனவே தொடரை தன்வசப்படுத்தியது. மூன்றாவது போட்டி சிட்டகாங்கில் நேற்று நடந்தது. "டாஸ்" " வென்ற வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹசன், "பீல்டிங்" " செய்தார்.
கீஸ்வெட்டர் சதம்:
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு கேப்டன் அலெஸ்டர் குக் (32) சுமாரான துவக்கம் அளித்தார். பின்னர் அபாரமாக ஆடிய கிரைக் கீஸ்வெட்டர் (107), ஒருநாள் அரங்கில் தனது முதல் சதம் கடந்தார். "மிடில்-ஆர்டரில்" " வந்த கெவின் பீட்டர்சன் (22), கோலிங்வுட் (36), மார்கன் (36), லூக் ரைட் (32) ஓரளவு ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 284 ரன்கள் குவித்தது.
அப்தாப் ஆறுதல்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு, தமிம் இக்பால் "டக்-அவுட்டாகி" " ஏமாற்றினார். அடுத்து வந்த இம்ரூல் கெய்ஸ் (17) நிலைக்கவில்லை. பின்னர் பொறுப்புடன் ஆடிய அப்தாப் அகமது (46), முஷ்பிகுர் ரகிம் (40), கேப்டன் சாகிப் அல் ஹசன் (38), மகமதுல்லா (33) ஓரளவு ஆறுதல் அளித்தனர். வங்கதேச அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 239 ரன்கள் மட்டும் எடுத்து, 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்தின் பிரஸ்னன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின்மூலம் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. ஆட்டநாயகனாக கீஸ்வெட்டர் மற்றும் தொடர் நாயகனாக மார்கன் தேர்வு செய்யப்பட்டனர்.
More News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








