உலக கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் "ஆசிய சாம்பியன்" " தென் கொரிய அணி, நியூசிலாந்திடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இத்தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து அணி, அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
டில்லியில் உள்ள தயான்சந்த் தேசிய மைதானத்தில் 12வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன.
நேற்று "ஏ" " பிரிவில் நடந்த லீக் போட்டியில் ரேங்கிங் பட்டியலில் 5வது இடத்தில் உள்ள தென் கொரிய அணி, நியூசிலாந்தை(8வது இடம்) சந்தித்தது. இதில், துவக்கத்தில் இருந்தே நியூசிலாந்து அணி துடிப்பாக ஆடியது. ஆட்டத்தின் நான்காவது நிமிடத்தில் "பெனால்டி கார்னர்" " மூலம் ஆண்டி ஹேவர்ட், முதல் கோல் அடித்தார். 22வது நிமிடத்தில் "பெனால்டி ஸ்டிரோக்" " மூலம் கேப்டன் டீன் கோசின்ஸ் அசத்தல் கோல் அடித்தார். இதற்கு, "பலம் வாய்ந்த" " தென் கொரிய அணியால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது.
போராட்டம் வீண்:
இரண்டாவது பாதியில் தென் கொரியா வீரர்கள் கடுமையாக போராடினர். பந்து, இவர்கள் வசமே பெரும்பாலும் இருந்தது. ஆனாலும் "பினிஷிங்" " இல்லாததால் கோல் அடிக்க முடியவில்லை. ஏழு "பெனால்டி கார்னர்" " வாய்ப்புகளை வீணடித்து ஏமாற்றினர். போட்டியின் கடைசி நிமிடத்தில் "பெனால்டி ஸ்டிரோக்" " மூலம் தென் கொரியாவின் லீ நாம் யாங் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி, தென் கொரியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி, அதிர்ச்சி கொடுத்தது. இத்தொடரில் 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ள நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
நெதர்லாந்து வெற்றி:
மற்றொரு "ஏ" " பிரிவு லீக் போட்டியில் நெதர்லாந்து அணி, கனடாவை 6-0 என்ற கோல் கணக்கில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. உலக ரேங்கிங் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணிக்கு, கனடா அணி(11வது இடம்) துவக்கத்தில் கடும் நெருக்கடி கொடுத்தது. இரு அணி வீரர்களும் விட்டுக் கொடுக்காமல் போராட, முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.
கோல் மழை:
இரண்டாவது பாதியில் நெதர்லாந்து அணி எழுச்சி கண்டது. தொடர்ந்து தாக்குதல் நடத்தி கோல் மழை பொழிந்தது. 41வது நிமிடத்தில் டேகி டெகேமா முதல் கோல் அடித்தார். 43வது நிமிடத்தில் பிரவர் ஒரு கோல் அடித்தார். ரோஜர் ஹாப்மென்(48, 56வது நிமிடம்) 2 கோல் அடித்தார். ராப் ரெக்கர்ஸ்(53) ஒரு கோல் அடித்தார். கடைசி கட்டத்தில் "பெனால்டி கார்னர்" " மூலம் டேகி டெகேமா(63) மீண்டும் கோல் அடிக்க, நெதர்லாந்து அணி 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகளில் நூறு சதவீத வெற்றி பெற்றுள்ள நெதர்லாந்து அணி 9 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை அனேகமாக உறுதி செய்தது. தொடர்ந்து 3 தோல்விகளை பெற்ற கனடா அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
ஜெர்மனி வெற்றி:
நேற்று "ஏ" " பிரிவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் உலகின் "நம்பர்-1" " அணியான ஜெர்மனி, அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. இரு அணிகளும் மாறி மாறி கோல் அடிக்க, பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டத்தின் 5வது நிமி-டத்தில் ஜெர்ம-னி-யின் மார்டின் ஜிவிக்கர் முதல் கோல் அடித்தார். இதற்கு, அடுத்த நிமி-டத்தில் அர்ஜென்டினாவின் மார்டின் வில்லா லூகாஸ், பதி-லடி கொடுத்தார். பின் ஜெர்மனி சார்பில் மார்டின் ஜிவிக்கர்(14), மாத்தி-யாஸ் (23), மார்டின் ஹானர் -(51) தலா ஒரு கோல் அடித்த-னர். அர்ஜென்டினா தரப்பில் என்ரிக்(34), பெத்ரோ இபாரோ(55) தலா ஒரு கோல் அடித்தனர். இறுதியில் ஜெர்மனி அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
More News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








