ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் போட்டியில் கண்ட அதிர்ச்சி தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஜிம்பாப்வே அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று, 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது போட்டி நேற்றுமுன்தினம் கயானாவில் நடந்தது. "டாஸ்" " வென்ற ஜிம்பாப்வே கேப்டன் உட்சேயா, பேட்டிங் தேர்வு செய்தார்.
சிகும்புரா அரைசதம்:
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்கு மசகட்சா (14), சிபண்டா (5) மோசமான துவக்கம் அளித்தனர். பின்னர் இணைந்த பிரண்டன் டெய்லர் (47), தைபு (31) ஓரளவு ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த மட்சிகென்யரி (2) ஏமாற்றினார். பின்னர் களமிறங்கிய சிகும்புரா (50) அரைசதமடித்து நம்பிக்கை அளித்தார். மற்ற வீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க, ஜிம்பாப்வே அணி 49.5 ஓவரில் 206 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. வெஸ்ட் இண்டீசின் மில்லர் 4, ரோச் 3 விக்கெட் வீழ்த்தினர்.
கெய்ல் அபாரம்:
சுலப இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாரத் (7), பெர்னார்டு (1), சந்தர்பால் (10), பிளட்சர் (0) உள்ளிட்ட "டாப்-ஆர்டர்" " பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். பின்னர் அபாரமாக ஆடிய கேப்டன் கெய்ல் (88), தியோ நரைன் (65*) அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடர் 1-1 என சமநிலை அடைந்தது. ஆட்ட நாயகனாக வெஸ்ட் இண்டீசின் தியோ நரைன் தேர்வு செய்யப்பட்டார். மூன்றாவது போட்டி வரும் 10ம் தேதி கிங்ஸ்டவுனில் நடக்கிறது.
More News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








