உலக கோப்பை ஹாக்கி அரையிறுதிக்கு "நடப்பு சாம்பியன்" " ஜெர்மனி முன்னேறியது. நேற்று நடந்த முக்கியமான லீக் போட்டியில் நியூசிலாந்தை 5-2 என்ற கணக்கில் வீழ்த்தியது.
புதுடில்லியில் உலக கோப்பை ஹாக்கித் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றுள்ளன. "பி" " பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. "ஏ" " பிரிவில் நேற்று கடைசி சுற்று லீக் போட்டி நடந்தது. இதில் முக்கிய போட்டி ஒன்றில் உலகின் "நம்பர்-1" " அணியான ஜெர்மனி, 8வது இடத்தில் உள்ள நியூசிலாந்தை எதிர்கொண்டது.
ஜெர்மனி முன்னிலை:
இப்போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் ஆரம்பம் முதல் அனல் பறந்தது. போட்டியின் 15வது நிமிடத்தில் ஜெர்மனியின் கிறிஸ்டாப்கே, பீல்டு கோல் அடித்தார். அடுத்த இரு நிமிடங்களில் (28வது நிமிடம்) புளோரியன் பக்ஸ், ஒரு கோல் அடிக்க ஜெர்மனி அணி, முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது.
நியூசி.,பதிலடி:
தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெர்மனி அணிக்கு, 47 வது நிமிடத்தில் பிலிப் ஒயிட், ஒரு கோல் அடித்து அசைக்கமுடியாக முன்னிலை (3-0) பெறச்செய்தார். பின் போராடிய நியூசிலாந்து அணி, ஜெர்மனி தற்காப்பு பகுதியில், அதிரடி தாக்குதல் தொடுத்தது. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் மெக்கலீஸ், தங்கள் அணிக்கு கிடைத்த இரண்டாவது "பெனால்டி கார்னர்" " வாய்ப்பை கோலாக மாற்றினார். இதைத் தொடர்ந்து வில்சன் நிக்கோலஸ் (54வது நிமிடம்) பீல்டு கோல் அடிக்க, நியூசிலாந்து அணி 2-3 என இடைவெளியை குறைத்தது.
ஜெர்மனி வெற்றி:
"ஹாட்ரிக்" " சாம்பியன் பட்டம் வெல்ல காத்திருக்கும் ஜெர்மனி அணி, நியூசிலாந்து வீரர்களின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் கொடுத்தனர். ஆட்டத்தின் 63 வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி கார்னர்" " வாய்ப்பில் மோரிட்ஸ் பர்ஸ்டே, ஒரு கோல் அடித்தார். இதற்கு அடுத்த நிமிடத்தில் மத்தாயஸ் வித்தாஸ் ஒரு கோல் அடிக்க, ஜெர்மனி அணி 5-2 என முன்னிலை பெற்றது. இறுதியில் ஜெர்மனி அணி 5-2 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு "ஏ" " பிரிவு லீக் போட்டியில் தென் கொரியா, நெதர்லாந்து அணிகள் மோதின. நெதர்லாந்தை அதிக கோல் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே, அரையிறுதி வாய்ப்பு என்ற நிலையில், தென் கொரியா ஆரம்பத்தில் இருந்தே போராடியது. குறைந்த கோல் அடிப்படையில் தோற்றாலும் அரையிறுதி வாய்ப்பு உறுதி என்பதால், நெதர்லாந்து அணியினர் தற்காப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தினர். போட்டி துவங்கிய 30வது வினாடியில், ரொனால்டு புரோயர் ஒரு கோல் அடிக்க, நெதர்லாந்து 1-0 என முன்னிலை பெற்றது.
வீணான வெற்றி:
இதற்கு பதில் கோல் அடிக்க தென் கொரிய அணி போராடியது. போட்டியின் 31வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி கார்னர்" " வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஹியுன் வு, கோல் அடிக்க, முதல் பாதி 1-1 என முடிந்தது. தென் கொரிய வீரர் ஜோங் ஹோ சியோ, 47வது நிமிடத்தில் "பீல்டு" " கோல் அடிக்க, 2-1 என முன்னிலை பெற்றது. இறுதியில் தென் கொரியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இரு அணிகளும் தலா 10 புள்ளிகள் பெற்றன. ஆனால் கோல்கள் அடிப்படையில் நெதர்லாந்து முன்னிலையில் இருந்ததால் அரையிறுதிக்கு முன்னேறியது.
அர்ஜென்டினா வெற்றி
உலக கோப்பை ஹாக்கி தொடரின் கடைசி லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி, கனடாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
"ஏ" " பிரிவில் கடைசி லீக் போட்டி நேற்று நடந்தது. ஏற்கனவே அரையிறுதிக்கு நான்கு அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில், முக்கியத்துவம் இல்லாத இப்போட்டியில் தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள கனடா அணி, 14வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினாவை சந்தித்தது. ஆட்டத்தின் 29 வது நிமிடத்தில் கிடைத்த ஐந்தாவது "பெனால்டி கார்னர்" " வாய்ப்பில், லூகாஸ் வில்லா கோல் அடிக்க 1-0 என அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. பின் 43, 56 மற்றும் 70வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு மடியாஸ் பர்தேஸ், மரியோ அல்மடா, மார்டின் விலாஸ் ஆகியோர் தலா ஒரு கோல், அடித்தனர். இதற்கு பதிலடியாக கனடா வீரர்கள் ஸ்காட் டப்பர் (60 வது), டேவிட் ஜேம்சன் (65வது) இருவரும் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இறுதியில் அர்ஜென்டினா அணி, 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கனடா அணி தான் பங்கேற்ற ஐந்து போட்டிகளிலும், பரிதாபமாக தோல்வியடைந்தது.
இதையடுத்து 7, 8வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.
More News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








