Home FeedBack About us Contact us
ஹாடின் சதம்: ஆஸி., வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஹாடினின் அசத்தல் சதம் கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. நேற்று மூன்றாவது ஆட்டம், ஹாமில்டனில் நடந்தது. இதில் "டாஸ்" " வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாண்டிங், பீல்டிங் தேர்வு செய்தார்.

டெய்லர் ஆறுதல்:
நியூசிலாந்து அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. இங்ராம் (5), மெக்கலம் (23), கப்டில் (21) மற்றும் புரூம் (24) என, சீரான இடைவெளியில் அவுட்டாகினர். ஸ்டைரிஸ் (41), ஹாப்கின்ஸ் (45) இருவரும் அரைசத வாய்ப்பை கோட்டைவிட்டனர். மறுமுனையில் ரோஸ் டெய்லர், 62 ரன்கள் அடித்து ஆறுதல் தந்தார். கேப்டன் வெட்டோரி "டக்" " அவுட்டானார். நியூசிலாந்து அணி 46.2 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. ஹாரிஸ், ஜான்சன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

ஹாடின் சதம்:
எட்டிவிடும் இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன் (15) ஏமாற்றம் அளித்தார். பின் ஹாடின், பாண்டிங் இணைந்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டிங் (69) வெளியேறினார். ஹசி (9) நிலைக்கவில்லை. தன்பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ஹாடின், சர்வதேச அரங்கில் தனது இரண்டாவது சதத்தை (110) அடித்தார்.

ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்து எளிதான வெற்றி பெற்றது. ஒயிட் (25), வோஜஸ் (13) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து ஒருநாள் தொடரில் 2-1 என, ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.

More News

நியூசிலாந்துடன் நேற்று நடந்த முக்கிய போட்டியில் 105 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி .
நடுவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறை தேவை - கபில்தேவ்
அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் முதலிடத்தில் டைகர் உட்ஸ்.
பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா : உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை
முத்தரப்பு கிரிக்கெட்: மழையால் ஆட்டம் நிறுத்தம்
"நோ-பால்" வீசிய சர்ச்சை : இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை கிரிக்கெட் சபை
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி
இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் 20 ஓவர் போட்டியை ஆடுவேன் - முரளீதரன்
மீண்டும் 2-வது இடத்தை பிடித்துள்ள இந்திய அணி
100 மீற்றர் ஓட்ட உலக சாதனையாளரான உசைன் போல்ட் அமெரிக்க வீரர் டைசன் கேயிடம் தோல்வி!

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

mani
gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss