ஆஸி., தொடரில் மோசமான ஆட்டத்தால் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி வீரர்கள் 7 பேருக்கு கடும் தண்டனை அறிவித்துள்ளது. குறிப்பாக முன்னாள் கேப்டன் முகம்மது யூசூப், யூனிஸ்கான் ஆகிய இருவரும் ஆயுள் காலம் முழுவதும் விளையாட முடியாத அளவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் கடும் தோல்வியை சந்தித்தது. இதற்கு பாக்., ஆட்டக்காரர்கள் போக்கே காரணம் என்றும் முறையாக ஒத்துழைக்கவில்லை என்றும் புகார் கூறப்பட்டது.
இதனையடுத்து இது குறித்து விசாரணைக்கமிட்டி அமைத்து விசாரித்தது. இந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தண்டனை அளிக்கலாம் என்றும் பரிந்துரைத்தது. இதனையடுத்து பாக்., கிரிக்கெட் சபை தண்டனையை அறிவித்துள்ளது.
இதன்படி முன்னாள் கேப்டன்கள் முகம்மது யூசூப், யூனிஸ்கான் ஆகியோர் வாழ்நாள் முழுவதும் ஆடத்தடை விதிக்கப்பட்டது. ( இந்த இருவரும் மோசமாக ஆடியதாகவும் , இளம் வீரர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்ததாகவும் குற்றச்சாட்டு) . சோயப் மாலிக் ( ஒத்துழையாமை) . ராணா ( ஒத்துழையாமை) ஆகியோர் ஒரு ஆண்டு ஆடத் தடையும், 20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஷாகீத் அப்ரிதிக்கு ( பந்தை சேதப்படுத்துதல்) 30 லட்சம் அபராதமும் , அக்மல் சகோதரர்களுக்கு தலா ரூ 5லட்சம் அபராதமும், விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தண்டனை அறிவிப்பில் ஒராண்டு, அல்லது 3 ஆண்டு தடை இருந்திருக்கிறது. ஆயுள் கால தடை என்பது இது வரை கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் வழங்கப்பட்டதில்லை. இந்த அதிரடி உத்தரவு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரியில் நடந்த இந்த ஆஸி ., பயணத்தில் 5 ஒரு நாள் போட்டி, 3 டெஸ்ட் தொடர் , ஒரு டுவென்டி 20 போட்டிகள் நடந்தது. இத்தனை போட்டிகளிலும் பாகிஸ்தான் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த விவகாரத்திற்குத்தான் இன்று அறிவிக்கப்பட்டுள்ள தண்டனை.
பாக்., கிரிக்கெட் எதிர்காலம் என்னவாகும் என்பதே கிரிக்கட் ரசிகர்களின் வினாவாகும்?
More News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








